'மாறன் எஃபெக்ட்!' - சன் டிவி பங்குகள் கிடுகிடு வீழ்ச்சி!
மும்பை: மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சன்டிவியின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தயாநிதி மாறன் அவரது சகோதரர் நிறுவனத்தின் நலன் கருதி ஏர்செல் நிறுவனத்தின் உரிமத்தை முடக்கி வைத்தார் என்று தயாநிதி மாறனின் முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா சிபிஐயிடம தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட ஏர்செல் சிவசங்கரன், எனது நிறுவனத்தை விற்க தயாநிதி மாறன்தான் நிர்ப்பந்தம் செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
தயாநிதிமாறன் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் தயாநிதிமாறன் பிரதமரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார்.
ராஜினாமாவையடுத்து மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன்டிவியின் பங்குகளின் விலையில் 8 சதவீதம் சரிவு ஏற்பட்டது. அவர்களுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு விலைகளில் 3 சதவீதம் சரிவு காணப்பட்டது.
ஏற்கெனவே சன் குழுமத்தின் மிக முக்கிய நிர்வாகியான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கைதாகி பல்வேறு வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். அடுத்து தயாநிதி மாறன் கைதாவார் என எதிர்ப்பார்க்கப்படுவதால், சன் குழும பங்குகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications