ரீசார்ஜ் வியாபாரிகள் போராட்டத்துக்கு வணிகர் பேரவை ஆதரவு
சென்னை: செல்போன் ரீசார்ஜுக்கு தரப்படும் கமிஷன் குறைக்கப்பட்டதற்கு எதிராக ரீசார்ஜ் வியாபாரிகள் நடத்தும் போராட்டத்துக்கு வணிகர் பேரவை ஆதரவு அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
செல்போன் மற்றும் ரீசார்ஜ் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்ற வணிகர்களுக்கு தொடர்ந்து கமிஷன் தொகையை குறைத்து வந்துள்ளன. 2002-ல் ரீசார்ஜ் வணிகர்களுக்கு 7 சதவிகிதம் கொடுத்து வந்த நிறுவனங்கள் படிப்படியாக குறைத்து தற்போது 3.80 சதவிகிதம் வழங்கி வருகின்றன.
கடை வாடகை, மின் கட்டணம், சம்பளம் அனைத் தும் உயர்ந்து விட்ட நிலையில் கமிஷன் குறைப்பால் ரீசார்ஜ் ரீடெயில் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விளம்பரத்திற்காக கோடிக் கணக்கில் செலவிடும் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு குறைந்த லாபம் வழங்கி தங்களது லாபத்தை அதிகப்படுத்தி வருவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட ரீசார்ஜ் நிறுவனங்கள் அலட்சியப்படுத்துகின்றன.
இன்றைய காலகட்டத்தில் சில்லரை வணிகத்தில் பல்வேறு பிரிவு வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல் தற்போது செல்போன் மற்றும் ரீசார்ஜ் விற்பனை செய்யும் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அகற்ற வேண்டியது பேரமைப்பின் கடமை என்ற அடிப்படையில் செல்போன் ரீசார்ஜ் விற்ப னையாளர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழுமையான ஆதரவைத் தரும்! எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிரச்சினைகளை மேலும் வளர்க்காமல் தீர்வு காண முன் வர வேண்டும் என்று பேரமைப்பு கேட்டுக் கொள்கின்றது.
-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications