முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டும் பணிக்கு ரூ. 5 கோடி ஒதுக்கியது கேரளா

முல்லைப் பெரியாறு அணையை இடித்துத் தரைமட்டமாக்குவது, புதிய அணையைக் கட்டி அதை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தமிழகத்தை தவிக்க விடுவது என்பதில் கேரளா உடும்புப் பிடியாக உள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்து கடுமையான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்ட கேரள அரசு தற்போது முதல் கட்டப் பணிகளுக்காக ரூ. 5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கேரள சட்டசபையில் அந்த மாநில நிதியமைச்சர் கே.எம்.மோனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார்.அப்போது முல்லைப் பெரியாறு புதிய அணையின் முதல் கட்டப் பணிகளுக்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இந்தப் பணிகளை செயல்படுத்த புதிய ஆணையகம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
முல்லைப் பெரியாறில் புதிய அணையைக் கட்டும் கேரளாவின் முயற்சிகளுக்கு எதிராக தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள அரசோ அணை தொடர்பான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கேரளாவின் இந்த தைரியமான தொடர் பணிகளின் பின்னணி என்ன என்பதும் புரியாத புதிராக உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications