Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண், காதலனுடன் சென்னையில் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து பெண் குழந்தையைக் கடத்திய பெண், தனது கள்ளக்காதலுருடன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சமுத்திரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன்(36). விவசாயக் கூலி. அவரது மனைவி மகேஸ்வரி(26). மகேஸ்வரிக்கு கடந்த 5-ம் தேதி் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையை மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் கடத்திச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்த குரோம்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் புதுவை போலீசாரை தொடர்பு கொண்டு அந்த குழந்தையை கடத்திய பெண் தனது காரில் தான் குரோம்பேட்டை வந்ததாகத் தெரிவித்தார்.

இதையடுத்து புதுவை போலீசார் குரோம்பேட்டை விரைந்தனர். அந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அவர் பெயர் சுமித்ரா என்கிற பாத்திமாகனி. அதே பகுதியில் கவரிங் நகைக் கடை நடத்தி வந்தார். அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. இருப்பினும் கணவரால் கைவிடப்பட்டவர்.

விசாரணையில் அவர் கூறியதாவது,

எனக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகியும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. முதல் கணவர் மூலம் 10 வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் தான் எனக்கு கனி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு, அவரை 3-வது கணவராக ஏற்றுக் கொண்டேன். அப்போது கர்ப்பமடைந்த எனக்கு குழந்தை இறந்தே பிறந்தது.

இந்த விஷயம் கனிக்கு தெரியாது. எனவே அவரை ஏமாற்ற ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்த நான் மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்த முடிவு செய்தேன். எனக்கு கிரிதரபிரசாத் என்ற கள்ளக்காதலன் இருந்தார். அவரிடம் இது பற்றி கூறினேன்.

உடனே நாங்கள் இருவரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று அங்கு ஒரு பாட்டி மற்றும் தாயிடம் நைசாகப் பேசி பெண் குழந்தை ஒன்றை கடத்தினேன். ஆனால் கார் டிரைவரால் சிக்கிக் கொண்டோம் என்றார்.

சுமித்ராவுடன், அவரது கள்ளக்காதலன் கிரிதரபிரசாத்தும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை அதன் தாய் மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+