திமுக பொதுக்குழு ஏற்பாடுகள்: கோவையில் ஸ்டாலின் ஆய்வு

கோவையில் வரும் ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திமுக பொதுக் குழு கூட்டம் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சென்னைக்கு வெளியே நடக்கும் முதல் பொதுக் குழுக் கூட்டம் இது ஆகும்.
மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி எம்பி கைது ஆகியவற்றால் திமுக-காங்கிரஸ் இடையே உறவில் கடும் நிலவும் நிலையில் இக் கூட்டம் நடக்கிறது.
இந் நிலையில் இன்று கோவை வந்த ஸ்டாலின், கூட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், பொதுக்குழு ஏற்பாடுகளில் 85 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும்.
திமுகவினருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதுகுறித்த புகார்களை கட்சி தலைமை அலுவலகம் அல்லது மாவட்ட திமுக அலுவலத்தில் கட்சியினர் புகார் தரலாம் என்றார்.
பொதுக் குழுவில் கலந்துகொள்வதற்காக 22ம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதி கோவை வரவுள்ளார்.
பொய் வழக்கு போடுவதில் அதிமுக அரசு கவனம்-கருப்பசாமி பாண்டியன்:
இந் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதில் தான் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் குற்றம் சாட்டியனார்.
நெல்லை மாவட்ட திமுக சார்பில் உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், தென்காசி பகுதியில் ரயில்வே மேம்பாலம், சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி என நடைபெற்று வரும் திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. கல்வெட்டுகளில் யார் பெயர் வந்தாலும், மக்கள் மனதில் யார் இந்த திட்டங்களை கொண்டு வந்தது என்று கல்வெட்டாக பதிந்துள்ளது.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதிலேயே அதிமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. யார் மீது வழக்கப் போடுவது, என்ன வழக்குப் போடுவது என்று ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications