சன் குழு பொது மேலாளரின் சகோதரர் மிரட்டியதாக போலீஸ் எஸ்.பியிடம் புகார்
நெல்லை: சன் குழும பொது மேலாளர் முருகனின் சகோதரரான பாலு என்கிற பாலசுப்பிரமணியன் தன்னை மிரட்டியதாக நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி. விஜயேந்திர பிதாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகார் மனுவில்,
புளியங்குடியில் கோமதி நாயகம் என்பவர் நடந்தி வந்த கேபிள் டிவியை கடந்த 2009ம் ஆண்டு வாங்கி 2 ஆண்டுகளாக தொழில் செய்து வந்தேன். அப்போது சன் டிவி குழுமத்தின் தென்மண்டல பொது மேலாளர் முருகன் என்பவரின் சகோதரர் பாலு என்ற பாலசுப்பிரமணியன் மற்றும் கே பாஸ்கர் ஆகிய 2 பேரும் என்னை சந்தித்து மிரட்டினர்.
புளியங்குடியில் இருந்து ராஜபாளையம் வரை சுமார் 40கிமீ தூரத்திற்கு நெடுஞ்சாலையில் அரசு அனுமதி இல்லாமல் கேபிள் லைன் போட்டு லிங்க பெற வேண்டும் என கூறினர். இது தொடர்பாக பொய் புகார் அளித்து மிரட்டி பணிய வைத்தனர். அந்த புகாரால் மனம் உடைந்த நான் வேறு வழியில்லாமல் அவர்கள் கொண்டு வந்த சுபம் கேபிள் விஷன் இணைப்பை பெற்றேன்.
இதன்பின்னர் என்னுடைய கேபிள் தொழிலையே தருமாறு கேட்டனர். நான் கொடுக்க மறுத்ததும் மீண்டும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து அடியாட்களை வைத்து மிரட்டினர். வேறு வழியின்றி கையெழுத்து போட்டு கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் கொடுப்பதாக கூறிய பணத்தையும், தர முடியாது என கூறினர். பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே என்னுடைய கேபிள் டிவியை மீ்ட்டு தர வேண்டுகிறேன். இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications