தமிழகத்தில் பல போலீஸ் எஸ்.பிக்கள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் பல போலீஸ் எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி கூடுதல் எஸ்.பியாக இருந்த டி.கே.புகழேந்தி, சென்னை திருவல்லிக்கேணி துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக போலீஸ் அகாடமியின் கூடுதல் எஸ்.பியாக இருந்த எம்.பன்னீர்செல்வம், சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை துணை ஐஜி தலைமையகத்தில் பணியாற்றிய ஏ.ஜி.பாபு, வேலூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக இருந்த எஸ்.சாந்தி, கொள்ளை தடுப்புப் பிரிவு எஸ்.பியாக்கப்பட்டுள்ளார்.
என்ஐபி சிஐடி பிரிவில் எஸ்.பியாக பணியாற்றிய பி.விஜயகுமாரி, திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு எஸ்.பியாகவும், என்ஐபி சிஐடி பிரிவில் கூடுதல் எஸ்.பியாக இருந்த ஆர்.கண்ணப்பன், அரியலூர் மாவட்ட எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் துணை போலீஸ் கமிஷனராக எஸ்.பிரபாகரனும், அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக எம்.விஜயலட்சுமியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications