மும்பை குண்டுவெடிப்பில் பாக். தொடர்பு குறித்து தீவிரமாக விசாரிக்க பாஜக கோரிக்கை
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளத பாஜக, இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தீவிரமாக விசாரித்து கண்டறிய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. மிகவும் கோழைத்தனமான தாக்குதல் இது. வேண்டும் என்றே மும்பையை தொடர்ந்து குறி வைத்து இந்திய தேச விரோதிகள் தாக்கி வருகின்றனர்.
தீவிரவாதம் மூலம் இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர் இன்னும் முடியாமல் தொடர்கிறது என்பதை இந்தத் தாக்குதல் நிரூபித்துள்ளது. இந்த தீவிரவாதத்தை முழுமையாக நசுக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு இருக்கிறதா என்பது முழுமையாக, தீவிரமாக கண்டறியப்பட வேண்டும்.
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்தாக வேண்டிய கட்டத்திற்கு நாம் வந்து விட்டோம். இதுபோன்ற தாக்குதல்களை முழுமையாகத் தடுக்கும் வகையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை அதன் உச்சந்தலையிலேயே நசுக்க வேண்டும். வெறுமனே உஷார் நிலையை அறிவித்தால் மட்டும் போதாது.
2008 தாக்குதலுக்குப் பின்னர் மும்பையில் மிக பலத்த கண்காணிப்பும், பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது மிகவும் வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது. தீவிரவாதத்தை வேரோடு ஒழிக்க உறுதியான அரசியல் தைரியமும், கடுமையான நடவடிக்கையும் தேவை என்பதையே இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் காட்டுகின்றன என்றார் அவர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications