பிரதமர் பதவியை ஏற்கும் முழுத் தகுதியும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு- சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

Sarathkumar
சென்னை: இந்திய நாட்டின் பிரதமராகும் முழுத் தகுதியும் படைத்த ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார்.

சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினார். ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்த அவர், தனது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் ஏழை எளியோருக்கு இன்று உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

சரத் பிறந்த நாள் இளைஞர் தினம்

பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் சரத்குமார். அப்போது அவர் பேசுகையில்,

என்னுடைய பிறந்த நாளை இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறேன். இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும், மாணவ மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமான உதவிகளையும் ஏழை எளியோருக்கு நல உதவிகளும் கட்சி நிர்வாகிகள் இன்று வழங்கப்பட்டு வருகிறது.

குண்டுவெடிப்பு வருத்தம் தருகிறது

நேற்றைய தினம் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மிகுந்த வருத்தத்தை தருகிறது. ஏற்கனவே கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். இப்போது நடந்துள்ள குண்டுவெடிப்பு நமக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதற்கு மத்திய உளவுத்துறை செயல்படாததே காரணமாகும். மத்திய அரசு உளவுத்துறையை பலப்படுத்தி இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மும்பை குண்டுவெடிப்பு தமிழகத்திற்கு ஒரு எச்சரிக்கை. இதனால் மத்திய உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பதோடு கடலோர காவல் படையையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

துணிச்சல் மிக்கவர் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் போர்க்குற்றம் இழைத்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசினை சேர்த்துக்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்தியாவுக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. மேலும் தெற்கிலும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதும், இலங்கை அரசால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.

பிரதமர் பகுதிக்கு தகுதி வாய்ந்தவர்

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை துணிச்சலான நடவடிக்கை. இது மிகவும் பாராட்டத்தக்கது. இதன் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய திருநாட்டின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ஆவார்.

நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். மக்கள் ஆதரவோடு அமோக வெற்றி பெற்ற அதிமுக அரசுக்கு நாங்கள் உறுதுணையாக இருந்து மக்கள் பணி ஆற்றுவோம் என்றார் சரத்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+