காங்- திமுக நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு புகார்
ஊட்டி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேரங்கோடு பஞ்சாயத்து துணை தலைவர் தங்கபாலு, திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் காசிலிங்கம் ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிதாஸ். அவர் தனக்கு சொந்தமான நிலத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேரங்கோடு பஞ்சாயத்து துணை தலைவர் தங்கபாலு, திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் காசிலிங்கம் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமாரிடம் அந்தோணிதாஸ் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
அந்தோணிதாஸ் ஆகிய நான், எனது மனைவி அல்போன்சாவுடன் சேரங்கோட்டில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் தேயிலை விவசாயம் செய்து வருகிறோம்.
எனது மகள் ரோஸ்லீன் என்பவருக்கு 24 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தோம். அவர் கணவருடன் வாழாமல் எங்கள் வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் எனக்கும், எனது மகளுக்கும் இடையே நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
தற்போது இந்த நிலம் தொடர்பாக சேரங்கோடு பஞ்சாயத்து துணை தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கபாலு, திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் காசிலிங்கம் மற்றும் அந்தோணி ஆகியோர் எனக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள பட்டா நிலத்தை அவர்களுகுக ரூ. 30 லட்சத்திற்கு கொடுக்குமாறு மிரட்டுகின்றனர்.
நிலத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று எனது மகள் மூலமாகவும், நேரடியாகவும், அப் பகுதியைச் சேர்ந்த காவல் நிலைய ஆய்வாளர் தண்டபாணியுடன் சேர்ந்து மிரட்டுகின்றனர்.
எனவே, எனது நிலத்தை மோசடி செய்ய நினைக்கும் ஆய்வாளர் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர், திமுக நகராட்சி தலைவர் ஆகியோரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். மேலும், அவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீது வி்சாரணை நடத்தி உண்மை நிலையை அறிய எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் உண்மையாகும் பட்சத்தில் திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது நில அபகரிப்பு மோசடி வழக்கு பாய வாய்ப்பு உள்ளது.
இதுவரை நில அபகரிப்பு புகாரில் திமுகவினர் மீது மட்டுமே புகார்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீதும் நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications