மும்பை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

15 நிமிடங்களில் 3 குண்டுவெடிப்புகள்
மும்பையில் நேற்று மாலை 6.45 மணியிலிருந்து 7 மணி வரை கால் மணி நேரத்திற்குள் ஜவேரி பஜார், ஓபரா ஹவுஸ், தாதர் மேற்கு ஆகிய இடங்களில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து மும்பையை அதிர வைத்தன.
இந்த கோர சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பில் ஐஇடி வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இணைந்து இதை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மும்பையில் தற்போது என்ஐஏ குழுக்கள் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளன. என்எஸ்ஜி கமாண்டோப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்தும், ஹைதராபாத்திலிருந்தும் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவினர் மும்பை வந்துள்ளனர்.
நேற்று இரவு மும்பையில் கன மழை பெய்ததால் பல முக்கியத் தடயங்கள் அழிந்திருக்கலாம் என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இருப்பினும் குண்டுவெடித்த இடங்களை முடிந்தவரை பாதுகாப்புடன் வைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, தாதர் மற்றும் ஓபரா ஹவுஸ் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் சில உருப்படியான தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications