கிளிநொச்சியில் 65 ஆயிரம் வாக்காளர்கள்... விரைவில் தேர்தல்!
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி: விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் கிளிநொச்சியில் 65 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரமாகத் திகழ்ந்தது கிளிநொச்சி மாவட்டம்.
இப்போது ராணுவத்தின் வசமுள்ள இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் உள்ளட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றார்கள்.
இந்தத் தேர்தலில் 65 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட ஆட்சியர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தல் நடவடிக்கைகள் கிளிநொச்சி அரசு செயலகத்தினால் கையாளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென அவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications