அஞ்சுகம் அம்மையார் திருமண உதவி திட்டம் பெயர் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

DR Muthulakshmi Reddy
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் பெயரிலான கலப்புத் திருமண உதவித் திட்டத்தின் பெயரை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் என்று அதிமுக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

தமிழக அரசு 5 திருமண உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு மறுமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித் திட்டம்,

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய பெயர்களில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூக நலத்துறை சார்பிலான இந்த 5 திட்டங்கள் மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந் நிலையில் கலப்புத் திருமண உதவி திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு, இதுவரை அஞ்சுகம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

இப்போது இந்த திட்டத்தின் பெயர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சமூக நலத்துறை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+