ஆயுள் கைதிக்கு திருமணம்-17 நாட்கள் பரோல் விடுமுறை
நெல்லை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஷேக் சிந்தா மதாருக்கு இன்று திருமணம் நடந்தது.
பத்தமடை லெப்பை தெருவைச் சேர்ந்தவர் ஷேக் சிந்தா மதார். இவர் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மீது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.
அந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவுக்காரப் பெண்ணுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து இவர் கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் வரும் 15-ம் தேதி (இன்று) தனக்கும், தன்னுடைய உறவுக்காரப் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. அதனால் ஒரு மாதம் பரோல் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனையடுத்து நீதிபதி மனுவை விசாரித்து திருமணத்திற்காக ஷேக் சிந்தா மதாருக்கு இன்று (15-ம் தேதி) முதல் 17 நாட்கள் பரோல் விடுமுறை அளிக்குமாறு காவல் மற்றும் சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.
இதன் பேரில் ஷேக் சிந்தா மதார் நேற்று மாலை திருமணத்திற்காக பரோல் விடுமுறையில் பத்தமடையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பலத்த போலீஸ் காவலுடன் சென்றார். இன்று காலை பத்தமடையில் அவருக்கு திருமணம் நடந்தது. வரும் 31-ம் தேதி மாலையில் மீண்டும் அவர் பாளை சிறையில் அடைக்கப்படுவார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications