ராணா, ஹெட்லியை விசாரிக்க அனுமதிக்க முடியாத நிலையில் அமெரிக்கா இருகிகறதாம்
டெல்லி: லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் பங்கேற்றவர்களுமான பாகிஸ்தானிய கனடியர் தஹவூர் ராணா மற்றும் பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோரை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி அளிக்க முடியாத நிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பதில் அமெரிக்கா எப்போதுமே இரட்டை நிலையைக் கையாண்டு வருகிறது. தனக்கு ஒன்று என்றால் உலகையே அழிக்கத் தயாராக இருக்கும் அமெரிக்க, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு தள்ளாடி வரும் இந்தியாவுக்கு உதவுவதில் மட்டும் மிக மிக பாரபட்சம் பார்த்து வருகிறது.
உள்ளங்கை நெல்லிக்கனியாக இது நமக்குத் தெரிந்தாலும் வேறு வழியில்லாத நிலையில் இருக்கிறது இந்தியா.
மும்பையில் 2008ம் ஆண்டு பத்தே பத்து தீவிரவாதிகளை அனுப்பி இந்தியாவையே பதற வைத்து விட்ட பாகிஸ்தானிய லஷ்கர் இ தொய்பாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள ஹெட்லியையும், ராணாவையும் விசாரிக்க இந்தியாவை அனுமதிப்பதில் பயங்கர பார்மாலிட்டிகளைக் கூறி கடுப்படித்து வருகிறது அமெரிக்கா.
இருவரும் கைது செய்யப்பட்டபோது அவர்களை விசாரிக்க முடியாமல் இந்திய விசாரணை அமைப்புகள் கடுமையாக தவித்தன. பெரும் அலைக்கழிப்புக்குப் பி்ன்னர், பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பேசிய பின்னரே அனுமதி கிடைத்தது.
இந்த நிலையில் மீண்டும் இருவரையும் விசாரிக்க இந்தியா முயன்று வருகிறது. ஆனால், மீண்டும் அலைக்கழிக்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி பீட்டர் பர்லிக் கூறுகையில், ஹெட்லி, ராணாவை விசாரிக்க எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், அதற்கான நடைமுறைகள் மிகவும் கடினமானதாக உள்ளது. இயலாத காரியமாக உள்ளது.
2008 தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்துவருகிறது. இருப்பினும் ஹெட்லி, ராணாவை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி தருவது என்பது இரு நாடுகளுக்கிடையிலான விஷயமாக இல்லை. அது நீதிமன்றத்தின் கட்டு்பபாட்டில் உள்ள விஷயமாகும்.
நீதித்துறையின் நடைமுறைகளில் அரசு குறுக்கிட முடியாத நிலை உள்ளது. எனவேதான் இந்த சிக்கல் என்று கூறியுள்ளது அமெரிக்கா.
இதற்கிடையே, சமீபத்தில் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக புலனாய்வுத் தகவல் எதையும் இந்தியாவுடன் அமெரிக்கா பகிர்ந்து கொண்டதா என்ற கேள்விக்கு பீட்டர் பதிலளிக்கையில், இந்தியாவுடன் எப்போதெல்லாம் தகவல் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நாங்கள் பகிர்ந்து கொண்டுதான் உள்ளோம் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications