ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச்சூடு: 3 தீவிரவாதிகள், 1 ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை
குப்வாரா: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே காலையில் இருந்து நடந்து வரும் துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகளும், 1 ராணுவ அதிகாரியும் கொல்லபப்ட்டனர். மேலும், 5 ராணுவத்தினர் காயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டம் லோலப் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளை சரண் அடையுமாறு கூறியதற்கு அவர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு சுடத் துவங்கினர். தீவிரவாதிகள் ஒரு பெண்ணை பிணையக்கைதியாக பிடித்தனர். பாதுகாப்பு படையினர் அந்த பெண்ணை போராடி மீட்டனர். அந்த வீட்டில் இருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே குப்வாரா மாவட்டத்தில் உள்ள மைதான்பூரில் ஒரு வீட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு மூண்டுள்ளது. அந்த வீட்டிற்குள் 1 முதல் 2 தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர் என்று தகவல்கள் வந்துள்ளன. காலை முதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் துப்பாக்கிச் சூட்டில் 1 ராணுவ அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார், 5 அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications