கிட்னி பாதிப்பால் 5 ஆண்டில் 50 பேர் பலி- மக்கள் பிரதிநிதிகளே, ஏதாவது செய்யகக் கூடாதா?
விருதுநகர்: விருதுநகர் அருகே சிறுநீரக பாதிப்பால் ஐந்து ஆண்டுகளில் 50 பேர் பலியானதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள எஸ்.மறைக்குளம், சத்திரம், புளியங்குளம் கிராமங்களில் பலரும் கிட்னி பாதிப்பால் அவதிப்படுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் கிட்னி பாதிப்பால் இறந்துள்ளனர். இவர்கள் அனைவருமே 40 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இச்சம்பவம், இக்கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இங்குள்ள குடிநீர் சுண்ணாம்பு கலந்ததாக இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற பீதி உள்ளது. இங்குள்ள குடிநீரை சோதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு முக்கிய காரணமே குடிநீர் தான், என்கின்றனர் கிராம மக்கள்.
இது தொடர்பாக கூறுகையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன் முகம், கை, கால் வீங்கி, உடல் சோர்வு ஏற்பட்டது. மதுரை கிட்னி சென்டரில் சோதித்த போது இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டது தெரிந்தது. தற்போது மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். கிராமத்தில் கிட்னி பாதிப்பால் பலர் இறந்த நிலையில் குறைந்த வயதுடையோர் திடீரென இறக்கின்றனர்.
ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று பேர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் தெரியவில்லை. குடிநீரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஒரு சில ஆண்டுகளிலே 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். தற்போது இங்கு 30க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விருதுநகர் சுகாதார துணை இயக்குனர் கூறுகையில், "கிட்னி பாதிப்புக்கு குடி நீர் கூட முக்கிய காரணமாக இருக்கலாம் . குடிநீரில் கால்சியம் அதிகமாக இருக்கும் போது கிட்னி பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தொடர்பாக ஆய்வு செய்து, குடிநீரில் பிரச்னை என்றால் சுத்திகரிப்பு பிளான்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மக்கள் பிரதிநிதிகளே என்னங்க பண்றீங்க, இந்தப் பாவப்பட்ட மக்களுக்காக ஏதாவது செய்ய முயற்சிக்கக் கூடாதா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications