2008 மும்பை தாக்குதல் சதிகாரன் இலியாஸ் காஷ்மீரி இறக்கவில்லை; உயிருடன் உள்ளதாக தகவல்
இஸ்லாமாபாத்: கடந்த மாதம் பாகிஸ்தானில் அமெரி்க்க விமானத் தாக்குதலில் உயிர் இழந்ததாகக் கூறப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி உயிருடன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அல்-கொய்தாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி தீவிரவாத அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி. 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்டது இலியாஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்குப் பேர் போன சுயாட்சி கொண்ட வட-மேற்கு எல்லைப் புற மாகாணமான வசீர்ஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 3-ம் தேதி அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் காஷ்மீரி உயிருடன் இருப்பதாகவும், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் காஷ்மீரி இறந்துவிட்டான் என்பதை உறுதிபடுத்தத் தவறிவிட்டனர் என்று கூறப்படுகின்றது.
காஷ்மீரி இறந்து கிடப்பது போன்ற புகைப்படத்தை ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி வெளியிட்டிருந்தது. ஆனால் அதில் இருப்பது நவம்பர் 2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்பது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரி கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அன்மையில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் செய்யது சலீம் ஷாசாத் காஷ்மீரியை பேட்டி எடுத்ததன் மூலம் அவன் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
பாகிஸ்தானில் அல் கொய்தாவுக்காக செயல்படும் முக்கியத் தலைவர் காஷ்மீரி என்று தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications