அழகிரியின் கூட்டாளி 'அட்டாக்' பாண்டி மீது இன்னொரு வீடு அபகரிப்பு வழக்கு
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய கூட்டாளியான அட்டாக் பாண்டி மீது இன்னொரு வழக்குப் பாய்ந்துள்ளது.
அழகிரியின் கூட்டாளிகள் மீது சரமாரியாக நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் பாயத் தொடங்கியுள்ளன. இவர்களால் பாதிக்கப்பட்ட பலரும் புகார்கள் கொடுத்து வருகின்றனர். இவற்றை விசாரித்து வரும் போலீஸார் ஒவ்வொரு வழக்காகப் பதிவு செய்து வருகின்றனர்.
அழகிரி படையின் முக்கிய தளகர்த்தர்களான அட்டாக் பாண்டி, கோ.தளபதி, எஸ்.ஆர்.கோபி ஆகியோர் மீது இதுவரை பெருமளவில் புகார்கள் வந்துள்ளன. இவர்களில் முதல் ஆளாக அட்டாக் பாண்டியை போலீஸார் தூக்கியுள்ளனர். திருமலை நாயக்கர் மஹால் அருகே ஒரு வீட்டைமுறைகேடாக ஆக்கிரமித்து காலி செய்யாமல் அந்த வீட்டையே அபகரித்ததாக அட்டாக் பாண்டி, அவரது தம்பி மாரிமுத்து, உறவினர் திருச்செல்வம் உள்ளிட்டோரைப் போலீஸார் கைது செய்து உள்ளே போட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்னொரு வழக்கிலும் அட்டாக் பாண்டியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை தெற்கு வெளி வீதியைச்சேர்ந்த பிருத்விராஜ் என்ற எல்ஐசி வளர்ச்சி அதிகாரிக்கு அவனியாபுரத்தில் ஒரு வீடு உள்ளது. 2006ம் ஆண்டு இந்த வீட்டுக்கு 2 ஆண்டு குத்தகை என்ற பெயரில் குடியேறினார் பாண்டி. ஆனால் ஒரு ஆண்டுக்கு மட்டும் வாடகை கொடுத்த அவர் அதன் பின்னர் தரவில்லை. இதையடுத்து ஒரு ஆண்டுக்குரிய வாடகையை அட்வான்ஸ் தொகையில் கழித்த பிருத்விராஜ், இடத்தைக் காலி செய்யுமாறு கூறினார். ஆனால் பாண்டியோ காலிசெய்யவில்லை. மாறாக, நான் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை என் பெயருக்கு எழுதிக்கொடுத்து விடு என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் அவனியாபுரம் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸில் பிருத்விராஜ் புகார் செய்த தகவல் அட்டாக் பாண்டிக்கு உடனடியாக போய் விட்டது. இதையடுத்து தனது அடியாட்களுடன் போய் பிருத்விராஜை மிரட்டியுள்ளார் பாண்டி. அப்போது தட்டிக் கேட்ட பிருத்விராஜின் மனைவியை பெண் என்றும் பார்க்காமல் அடித்துள்ளனர் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் தைரியம் அடைந்த பிருத்விராஜ் நடந்த சம்பவத்தை விளக்கி மீண்டும் புகார் கொடுத்தார். அதன் பேரில் தற்போது அட்டாக் பாண்டி மீது இந்த வழக்கையும் பதிவு செய்து அதிலும் கைது செய்துள்ளனர் போலீஸார்.
மேலும் அவரது கூட்டாளிகளான கண்ணன், ஜெயபாண்டி,சதீஷ்குமார், ஜோதிவேலன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைத் தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications