ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணியை ஆய்வு செய்தார் அமைச்சர் முனுசாமி
கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி குறித்து தமிழக அமைச்சர் கே.பி.முனுசாமி ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி நடந்து வருகிறது. இவற்றை நேற்று ஆய்வு செய்தார் அமைச்சர் கே.பி.முனுசாமி.
மூப்பனார் நகரில் ரூ.43 லட்சம் மதிப்பில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலிநாயனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, காரகுப்பம், மத்தூர் அருகேயுள்ள நாகம்பட்டி ஜெ.ஆர்.நகரில் கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
அதன்பின், கட்டுமானப் பணிகளை செய்துவரும் தனியார் நிறுவன திட்ட மேலாளர்களிடம், பணிகளை தரமாகவும், விரைந்து நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களுக்கு, குடிநீர் வழங்கும் நோக்கில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. ஆய்வின் போது, இத்திட்டத்தில் ஏதாவது கிராமம் அல்லது குடியிருப்புகள் விடுபட்டிருப்பது தெரிந்தால், அவையும் சேர்க்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications