தூத்துக்குடியில் 2 பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் இமிகிரேஷன் அதிகாரி நடத்திய சோதனையில் 2 பாஸ்போர்டுகள் வைத்திருந்த கேரள நபர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் ஆழப்புலா அருகே உள்ள சார்மூடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவர் நேற்று கொழும்புவிலிருந்து தூத்துக்குடி வந்த கப்பலில் வந்தார். இமிகிரேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் அவரது பாஸ்போர்டை ஆய்வு செய்தார். அப்போது அவர் 2 பாஸ்போர்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.
ஒரு பாஸ்போர்ட்டில் அவரது பெயர் ஷாஜி என்றும், மற்றொன்றில் ஷாஜி ஸ்டான்லி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணையில் அவர் கூறுகையில், கொழும்புவுக்கு இதே பாஸ்போர்ட்டில் தான் சென்றேன். விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரிகள் இந்த பாஸ்போர்ட்டுக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றார்.
ஒரு பாஸ்போர்ட்டில் ஷாஜி தனது படத்தை ஒட்டி திருத்தம் செய்திருப்பது தெரிய வந்தது. எனவே பாஸ்போர்ட்டின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய அவைகளை திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். இது குறிதது தூத்துக்குடி தெர்மல் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஷாஜியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications