இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முர்டோச் மீது தாக்குதல்: விசாரணை ஒத்திவைப்பு

இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கையான த நியூஸ் ஆப் தி வேர்ல்ட் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் மூடப்பட்டது. இந்த விவகாரம் இங்கிலாந்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து ஸ்காட்லாந்து யார்ட் முன்னாள் தலைவர் சர். பால் ஸ்டீபன்சன், த நியூஸ் ஆப் த வேர்ல்ட் பத்திரிக்கை உரிமையாளர் ரூபர்ட் முர்டோச், அவரது மகன் ஜேம்ஸ், முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ஜான் ஏட்ஸ் ஆகியோரிடம் எம்.பி.க்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணை நடந்து கொண்டிருக்கையில் திடீர் என ஒருவர் ஒரு தட்டில் ஷேவிங் கிரீமுடன் ரூபர்ட்டை தாக்க முயன்றார். இதைப் பார்த்த ரூபர்ட்டின் மனைவி வென்டி டெங்க் தனது இருக்கையில் இருந்து பாயந்து அந்த நபரின் கன்னத்தில் ஒரு அறைவிட்டார்.
இதையடுத்து அந்த நபரை போலீசார் இழுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையும் 10 நிமிடம் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் விசாரணை துவங்கிய போது ரூபர்ட் கோட் இல்லாமல் வந்தார்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க ரூபர்ட் மறுத்துவிட்டார். ஆனால் அவரது மகன் ஜேம்ஸ் மன்னிப்பு கேட்டுவிட்டு, இந்த பிரச்சனையை விரைவில் தீர்த்து வைப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த வழக்கை செய்தித் தாள்களில் படித்துவிட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், வெட்கியதாகவும் ரூபர்ட் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தால் ஊடகம், போலீஸ், பிரதமர் கேமரூன் உள்பட அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications