கூடன்குளம் அணுமின் நிலையத்தை நோட்டமிட்ட உபி இளைஞர் கைது
கூடன்குளம்: கூடன்குளம் அணுமின் நிலையத்தில் போலி சான்றிதழ் மூலம் பெயரை மாற்றி வேலையில் சேர்ந்த உத்தபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வெல்டிங் பிரிவில் ஒப்பந்த பணியாளராக போலி பெயர் மற்றும் போலி முகவரியில் ஒரு இளைஞர் கடந்த 18 மாதங்களாக பணியாற்றி வந்தார். அவரது செயல்கள் சந்தேகப்படும்படி இருந்தது.
இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரைப் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் பணியில் சேர்ந்தபோது சமர்பித்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் அவர் போலிச் சான்றிதழ் மூலம் தனது பெயரை சுபாஷ் பஸ்வான் எனவும், பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்து வேலையில் சேர்ந்தது தெரிய வந்தது.
உண்மையில் அவர் உத்திரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி ஆசாத் கான் என்பவரது மகன் முகமது மீரா கான் (25) என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜீஸ்குமார் கூடன்குளம் போலீசில் புகார் செய்தார். பெயரை மாற்றி முகமது மீரா கான் பணியில் சேர்ந்ததால் அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற கோணத்தில் நெல்லை எஸ்பி விஜேயந்திர பிதாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தீவிரவாதி இல்லை என்பதும், போலி ஆவணம் மூலம் பணியில் சேர சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மீரா கானை கைது செய்தனர். மீரா கானை பணியில் சேர்த்த ஒப்பந்த மேலாளர் தற்போது வேலையிலிருந்து நின்றுவிட்டார். அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளர்களாகச் சேர்ந்த அனைவரது சான்றிதழ்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications