சுரங்க மோசடி: லோக் ஆயுக்தா அறிக்கை லீக்-எதியூரப்பா, குமாரசாமி மீது குற்றச்சாட்டு

லோக் அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கர்நாடகாவில் சுரங்கமோசடி குறித்து விசாரணை நடத்தி தனது அறிக்கையை சமர்பித்துள்ளார். இதில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
அந்த அறிக்கையில் முதல்வர் எதியூரப்பா சுரங்க நிறுவன உரிமையாளர்களான ரெட்டி சகோதரர்களுக்கு உதவியதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பல பிரச்சனையில் சிக்கியிருக்கும் முதல்வர் எதிரயூரப்பாவுக்கு இந்த அறிக்கை பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில் எதியூரப்பா தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இந்த சுரங்க மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சுரங்க மோசடியில் ஈடுபட்டுள்ள எதியூரப்பா உடனே பதவி விலக வேண்டும் என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.
இந்த சுரங்க மோசடியால் அரசுக்கு 14 மாதத்தில் ரூ. ஆயிரத்து 800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக லோக் அயுக்தா நீதீபதி சந்தோஷ் ஹெக்டே குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எதியூரப்பாவை பதவி விலகச் சொல்கிறதே என்று கேட்டதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் வி. தனஞ்செய குமார் கூறியதாவது,
எதியூரப்பா தனது பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டார். அவருக்கும் சுரங்க செயல்பாட்டிற்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. அன்மையில் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் தொடர்பான லோக் அயுக்தா அறி்க்கையை காங்கிரஸ் நிராகரித்தது. அதுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications