மாலவி அதிபருக்கு எதிராக போராட்டம்: 18 பேர் பலி
லிலாங்வி: தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலவி நாட்டு அதிபர் பிங்குவா முதாரிகா என்பவருக்கு எதிராக போராட்டம்வெடித்துள்ளது.
லிபியா, எகிப்து உள்ளிட்ட நாட்டு அதிபர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தற்போது இந்த வரிசையில் மாலவியும் சேர்ந்துள்ளது.
மாலவி நாட்டின் அதிபரான பிங்குவா முதாரிகா கடந்த 2004-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். சிறந்த பொருளாதார நிபுணர். ஆனால் அவரது மோசமான பொருளாதாரத் திட்டங்களால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை தலைவிரித்தாடுகிறது.
இதை எதிர்த்து பாலன்டயீர் பகுதியி்ல் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் மெதுவாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. போராட்டக்காரர்கள் அரசியல் பிரமுகர்களின் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை குறி வைத்து கொள்ளையடித்து வருகின்றனர்.
வன்முறை மற்றும் கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இதுவரை 18 பேர் பலியாகினர். 130 பேர் காயமடைந்தனர்.
வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் வானொலியில் பேசிய அதிபர் முதாரிகா, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடித்து நொறுக்கினால் எரிபொருள் கிடைக்கப் போவதில்லை. வன்முறையில் ஈடுபடுவோர், பிசாசினால் ஏவப்பட்டு செயல்படுகின்றனர். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications