ரூ 1.85 லட்சத்துக்கு டபுள் பெட்ரூம் வீடு... மத்திய அரசு திட்டம்!!

இன்றைக்கு கிராமங்களில் கூட ஓரளவு வசதியான வீட்டைக் கட்டி முடிக்க ரூ 6 முதல் 8 லட்சம் வரை தேவைப்படுகிறது (இடத்துக்கான விலை தவிர்த்து). நகரங்களில் ஒரு சின்ன ஃப்ளாட்டுக்கே பல லட்சங்கள் வைக்க வேண்டிய கட்டாயம்.
செங்கல், மணல், கம்பி, சிமெண்டு என கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து ஏற்றத்தால் ஏழைகளின் சொந்தவீடு கனவு எட்டாக்கனியாகவே உள்ளது.
இருந்தாலும் அனைவருக்கும் சொந்த வீடு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசின் வீடு வறுமை ஒழிப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
25 சதுர மீட்டர் நிலத்தில் 2 படுக்கை அறைகள், ஒரு சமையல் அறை, மற்றும் குளியல் அறை கொண்ட ஒரு வீட்டை ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கட்டிக் கொடுக்க வறுமை ஒழிப்பு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக நாம் பயன்படுத்தும் கட்டுமான பொருட்களுடன் அந்தந்த பகுதியில் கிடைக்கும் கற்கள், மூங்கில், மண், ஆகியவற்றை பயன் படுத்தி இத்தகைய குறைந்த விலை வீடுகள் கட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய தொழில் நுட்ப முறையில் 20 சதவீத செலவு குறையும் என்று அவர்கள் உறுதிபட கூறினார்கள். இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உத்தர பிரதேசம் அமேதியிலும், அரியானா மாநிலம் பிஞ்சூர் பகுதியிலும் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அம்பாலா பகுதியில் இதே முறையில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டதாகவும், தொழில் நுட்ப மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத் திட்டம் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நிச்சயம் நனவாகிவிடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications