பிரதமரை குற்றம் சாட்டவில்லை-ஆனால், சிதம்பரத்தை சாட்சியாக சேர்க்க வேண்டும்: ராசா!

நான் பிரதமரையோ ப.சிதம்பரத்தையோ குற்றம் சாட்டவில்லை, பிரதமரை விசாரிக்க வேண்டும் என்றும் கூறவில்லை. நான் கூறாத விஷயங்களை நான் கூறியதாக மீடியாக்கள் தான் தவறான செய்திகள் வெளியிட்டுவிட்டன என்று ராசா இன்று பல்டி வாதம் செய்தார்.
அதே நேரத்தில் டிபி ரியாலிட்டி நிறுவன பங்குகள் விற்பனைக்கு ஒப்புதல் அளித்தவர் என்ற முறையில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும். அவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியளிக்க வேண்டும் என்றும் ராசா கூறினார்.
இன்று நடந்த விசாரணையின்போது ராசா தானே வாதாடினார். அவர் கூறுகையில்,
2ஜி லைசென்ஸ்கள் வழங்கியதில் ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக மத்திய தணிக்கைத் துறை அதிகாரி கூறியது அர்த்தமே அல்லாதது. இதை சிபிஐ கூட ஏற்கவில்லை.
ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமரும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலும் கூறியுள்ளனர். நான் செய்தது எல்லாமே அமைச்சரவை எடுத்த முடிவுகளை அமல்படுத்தியதும், எனக்கு முன்னாள் பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த அருண் ஷோரி ஏற்படுத்திய விதிகளை அமலாக்கியதும் தான். நான் குற்றவாளி என்றால் அருண் ஷோரியும் குற்றவாளி தான்.
2ஜி லைசென்ஸ் ஒதுக்கீட்டில் சதி நடந்தது என்கிறார்கள். என்ன சதி நடந்தது?. யூனிடெக் நிறுவனத்துக்கும் லைசென்ஸ் தரப்பட்டுள்ளது. அதன் போட்டி நிறுவனத்துக்கும் அடுத்த நாளே லைசென்ஸ் தரப்பட்டுவிட்டது. இதில் என்ன சதி நடந்தது என்கிறீர்கள்?.
ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனமும் தங்களது பங்குகளை எடில்சாட் மற்றும் டெலிநார் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குத் தெரியும். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இது குறித்து பிரதமருக்கும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் எனக்கு சுப்பீரியர் தானே?. இதில் பிரதமருக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் அது குறித்து தொலைத் தொடர்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவிடம் விளக்கம் கேட்டிருக்கலாமே?. அதே ஏன் செய்யவில்லை?.
நான் இப்படிச் சொல்வதால் பிரதமரையும் சிதம்பரத்தையும் நான் குறி வைப்பதாக எழுதுகிறார்கள், சொல்கிறார்கள். அது தவறு. நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை.
நான் சொல்லாததை எழுதுகிறார்கள். உண்மையை எழுதுவதாக இருந்தால், மீடியாக்களை நீதிமன்றத்துக்குள் அனுமதியுங்கள். இல்லாவிட்டால், அவர்களை (நிருபர்களை) வெளியே போகச் சொல்லுங்கள்.
இதனால் என்னை இந்த வழக்கிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். என்னை சிறையில் வைத்திருப்பதே சட்ட விரோதமானதாகும். இந்த நியாமற்ற நிலையை உருவாக்கியதே நீதிமன்றம் தான்.
என் மீதான இந்த வழக்கை எனது வழக்கறிஞர்கள் தவிடு பொடியாக்குவார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும்போது என் மீது சிபிஐ குற்றச்சாட்டை பதிவு செய்வதும் சரியல்ல.
எனக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம், பிற நீதிமன்றங்களின் நெருக்குதல் தான்.
உண்மையைச் சொன்னால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்குக் காரணமே அடுத்த போட்டியாளர் வந்துவிடாமல் தடுக்க கூட்டு சேர்ந்து செயல்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் தான். இவர்கள் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.
2007ம் ஆண்டு நான் அமைச்சரான பின்னர் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியமான டிராய், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி எத்தனை நிறுவனங்கள் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற விதியைக் கொண்டு வந்தது. அதன்படி தான் நான் செயல்பட்டேன்.
இங்கு தான் பிரச்சனை ஆரம்பமானது, லைசென்ஸ் கோரி 575 விண்ணப்பங்கள் வந்தன. இதையடுத்து விண்ணப்பங்களைக் குறைக்கவும் பரிசீலிக்கவும் வசதியாக 232 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தேன். அது தான் நான் செய்த தவறு. மனிதனாகப் பிறந்த எல்லோருமே தவறு செய்வது இயற்கை தான். மற்றபடி சதி நடந்தது என்பதெல்லாம் கற்பனையான வாதம்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் ரூ. 20,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இதை ஒப்புக் கொண்டால், இதில் பாதிக்கும் மேல், அதாவது ரூ. 14,000 கோடி வரை டாடாவின் தொலைத் தொடர்பு நிறுவனத்தால் தான் ஏற்பட்டது.
இந்தப் பொய் வழக்கால், நாட்டின் பெயர் தான் கெட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யக் கூட யாரும் இனிமேல் யோசிப்பார்கள் என்றார் ராசா.
நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது ராசாவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சுஷில்குமார், பிரதமர், ப.சிதம்பரம் ஆகியோருக்குத் தெரிந்தே டிபி ரியாலிட்டி பங்குகள் விற்கப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தைப் பொறுத்தவரை முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட கொள்கைகளையே பின்பற்றியதாகவும் கூறியிருந்தார்.
ராசா தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றார்.
இந் நிலையில் இன்று பிரதமர் விஷயத்தில் தனது நிலையை ராசா மாற்றிக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் ப.சிதம்பரம் விஷயத்தில் தனது நிலையை மேலும் தீவிரமாக்கியுள்ள ராசா, அவரை இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
நீதிபதி மீது கோபப்பட்ட ராசாவின் வழக்கறிஞர்:
முன்னதாக இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது ராசாவின் சார்பாக சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வரும் வழக்கறிஞர் சுஷில்குமார் நீதிபதி ஓ.பி.சைனி மீது கோபத்தைக் காட்டினார்.
நீதிபதியிடம் அவர் கூறுகையில், நீங்கள் இந்த வழக்குக்காக மட்டுமே ஊதியம் பெறுகிறீர்கள். நான் வேறு வழக்குகளுக்காகவும் செல்ல வேண்டி உள்ளது. தினமும் உங்கள் முன் வந்து உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா? இது மிகவும் நியாயமற்ற விசாரணையாக உள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்ய மட்டும் 6 மாதம் எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என்றார்.
இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications