பெங்களூர்: 9வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
பெங்களூர்: பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியில், தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை பலியானது.
பெங்களூரி்ல் ஜே.பி.நகர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ரிதம் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 9வது மாடியில் வசிப்பவர் விஷால் காஷ்யப். சாப்ட்வேர் இன்ஜினீயர். இவரது மனைவி அம்ருதா. இவர்களது மகன் அர்மான் (ஒன்றரை வயது).
நேற்று காலை அம்ருதா, குழந்தை அர்மானுக்கு உணவு ஊட்டுவதற்காக வராண்டா பகுதிக்கு வந்தார். பால்கனி வழியாக வேடிக்கை காட்டிய வண்ணம் உணவு ஊட்டிய போது, குழந்தை அர்மான் திடீரென குதித்தான்.
இதில் அம்ருதாவின் கையில் இருந்து தவறிய குழந்தை, 9வது மாடியில் இருந்து, 8வது மாடியில் உள்ள வராண்டா சுவரில் மோதியபடி தரையில் வந்து விழுந்து அந்த இடத்திலேயே இறந்தான்.
குழந்தையின் நிலையை கண்ட அம்ருதா மயங்கி விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ஜே.பி.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications