Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடர்ந்து போலீஸ் காவலில் வீரபாண்டி ஆறுமுகம்-இன்று 2வது நாளாக விசாரணை

Subscribe to Oneindia Tamil

Veerapandi Arumugam
சேலம்: நில அபகரிப்பு புகார் தொடர்பாக சேலம் போலீசாரிடம் நேற்று சரணடைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் இன்று 2வது நாளாக விசாரணை நடந்து வருகிறது

இரு நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று ஆஜரானார். அவரிடம் நேற்று முழுவதும் விசாரணை நடநத்து. இன்று 2வது நாளாக விசாரணை நடந்து வருகிறது.

வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸ் காவலில் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜரானார். அவரிடம் நேற்று முழுவதும் விசாரணை நடந்தது.

உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர்கள் சங்கமேஸ்வரன், சீனிவாசன், ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது துணை தாசில்தார்கள் பாலகிருஷ்ணன், பெரியசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் விசாரணையை வீடியோகிராபர்கள் 2 பேர் பதிவு செய்தனர். வீரபாண்டி ஆறுமுகத்திடம் கேட்க போலீசார் தயாரித்து வைத்திருந்த கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக கேட்டனர். ஆம். இல்லை என்ற முறையில் கேள்விகள் அமைந்திருந்தது. முதல் கேள்விக்கே வீரபாண்டி ஆறுமுகம் தெரியாது என்று பதில் அளித்தார்.

பகல் 11 மணியளவில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வெள்ளரி பிஞ்சு, மற்றும் காபி வழங்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அவரது உடலை சேலம் அரசு மருத்துவமனை, விநாயகா மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

மதியம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் மகேஸ்வரி வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்தார். ஆனால் அதை அனுமதிக்க போலீசார் மறுத்து விட்டனர். பின்னர் ஹோட்டலில் இருந்து சைவ உணவு வரவழைக்கப்பட்டு தரப்பட்டது.

தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் இரவு 8 மணி வரை போலீசார் விசாரணை நடந்தது. ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் 'தெரியாது' என்றே பதிலளித்தார்.

விசாரணை முடிந்ததும் வீரபாண்டி ஆறுமுகம் இரவில் வீட்டுக்கு செல்வதற்கு அனுமதிக்க கோரி அவரது வழக்கறிஞர் உதவி கமிஷனர் பிச்சையிடம் எழுத்துபூர்வமாக அனுமதி கேட்டார். ஆனால், நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவைப் பெறாததால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து இரவு வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சப்பாத்தி, ஜூஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் நிலையத்திலேயே இரவில் தங்க வைக்கப்பட்டார். அவர் தூங்க ஒரு கட்டில் வழங்கப்பட்டது.

நேற்று மட்டும் வீரபாண்டி ஆறுமுகத்திடம் 103 கேள்விகள் கேட்டகப்பட்டதாகத் தெரிகிறது.

இன்று காலை வீரபாண்டி ஆறுமுகம் எழுந்ததும் டீ வழங்கப்பட்டது. குளித்து முடித்த பின் 2வது நாளாக விசாரணையை போலீசார் துவக்கினர்.

வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடந்து வருவதால் போலீஸ் நிலையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் ஏராளமான திமுக தொண்டர்கள் காவல் நிலையத்தை சுற்றி நின்று கொண்டுள்ளனர். இரவிலும் அவர்கள் அங்கேயே நின்றிருந்தனர்.

சேலம் நிலமோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம்:

இந் நிலையில் சேலம் அங்கம்மாள் காலனி நில மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

சேலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்கள் சாட்சி அளித்தனர்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் இன்னொரு முன் ஜாமீன் மனு தள்ளுபடி:

இந் நிலையில் சேலம் நரசோதிபட்டியில் உள்ள அரசுப் புறம்போக்கான 20,900 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து மற்றும் சில இடத்தைச் சேர்த்து செழியன் நகர் என்ற ஒரு புதிய நகரை உருவாக்கியுள்ளனர். செழியன் என்பது வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பெயர்.

இந்த நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் பூமொழி என்பவர் சேலம் மாநர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் வேண்டும் என்று சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் மனு செய்திருந்தார். ஆனால், இதை விசாரித்த நீதிமன்றம் முன் ஜாமீன் தர மறுத்துவிட்டதோடு, மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.

திருச்சி திமுக துணை மேயர் மீதும் நில மோசடி புகார்:

இதற்கிடையே திருச்சி துணை மேயரும், திமுக நகரச் செயலாளருமான அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் மீது மாநகர போலீஸ் கமிஷனரிடம் நிலமோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அன்பழகன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

தனது வீட்டின் சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு அந்த இடத்தில்
கட்டடம் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பழனிச்சாமி என்பவர் போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+