மதுரை சிறையில் ஆயுள் கைதி மரத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி: கால் எழும்பு முறிவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தைச் சேர்ந்த பிச்சைக்காளி. கடந்த 2007-ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனை அனுபவித்து வரும் அவர் இன்று காலை சிறை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் மேல் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டார். இருப்பினும் உயரத்தில் இருந்து விழுந்ததால் அவர் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிறைத்துறை வாட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+