மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!!
டெல்லி: ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ வட்டி வீதங்களையும் 50 புள்ளிகள் வரை இன்று உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து வட்டிவீதத்தை உயர்த்தி வருகிறது ரிசர்வ் வங்கி. ஆனால் பல முறை இந்த உத்தியை பயன்படுத்தியும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை ஒற்றை இலக்கத்தில் இருந்த பணவீக்க அளவு இப்போது இரட்டை இலக்கத்தை நெருங்கியுள்ளது.
எனவே இம்முறை 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு தரும் கடனுக்கான வட்டி -ரெபோ ரேட் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்கும் ரொக்க வைப்புக்கான வட்டிவீதம் - ரிவர்ஸ் ரெபோ 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆர் வீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 11 முறை வட்டிவீதங்களை உயர்த்திக் கொண்டே வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
வட்டியை உயர்த்துவது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிதான் என்றாலும் தொடர்ந்து இதே உத்தியைப் பயன்படுத்துவது பொருளாதாரத்தை வீழ்ச்சிக்குள்ளாக்கும் என பொருளியல் நிபுணர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய வட்டி உயர்வு மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன்கள் மேலும் காஸ்ட்லியாகியுள்ளன. பல்வேறு கடன்களுக்கான வட்டிகள் கடுமையாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications