தூத்துக்குடி அருகே பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியவர் கழுத்து அறுத்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பெண்ணுக்கு ஆபாசமான முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய நபரை தலையை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தனர் இருவர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சாந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (30). இவர் ஒரு பெயிண்டர். நேற்று காலை வீட்டை விட்டை வேலைக்குக் கிளம்பிய அவர், பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்போது ரவிசங்கர் என்பவர் அங்கு வந்தார். ஜெயக்குமாரை போலீஸ் விசாரணைக்கு அழைத்திருப்பதாக கூறி அழைத்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ஜெயக்குமார். பின்னர் ரவிசங்கருடன் அவரது பைக்கில் ஏறிச் சென்றார். அத்திமரப்பட்டி, புதுக்கோட்டை சாலைக்கு வந்ததும் வண்டியை நிறுத்தினார் ரவிசங்கர். பின்னர் ஜெயக்குமாருடன் கடும் வாக்குவாதத்தில் இறங்கினார்.

இந்த நிலையில் அங்கு மறைந்திருந்த ரவிசங்கரின் நண்பர் ஒருவரும் திடீரென அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அவரும், ரவிசங்கரும், சேர்ந்து கத்தியால் ஜெயக்குமாரின் கழுத்தை அறுத்தனர். இதனால் துடிதுடித்த ஜெயக்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரவிசங்கரின் தங்கைக்கு அடிக்கடி ஜெயக்குமார் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து ரவிசங்கர் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளார். போலீஸாரும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜெயக்குமார்தான் தனது தங்கைக்கு எஸ்எம்எஸ் அனுப்பினார் என்பது ரவிசங்கருக்குத் தெரிய வரவே, தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளர்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்த கொலை செய்த ரவிசங்கர், அவரது கூட்டாளியைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+