திகார் சிறையில் ராசாவிடம் இன்று சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை!

ராசா அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் வைத்து இந்த விசாரணை நடக்கிறது. இதற்காக சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கூடுதல் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் 2 பேர் டெல்லி சென்றுள்ளனர்.
ராசா தவிர, இந்த வழக்கில் கைதாகியுள்ள ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் உயர் அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்தர் பிபாரா உள்ளிட்ட 6 பேரிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தவுள்ளது.
முன்னதாக இதற்கான அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் கடந்த 21ம் தேதி வருமான வரித்துறை கடிதம் எழுதியது. அதற்கு ஓ.பி.சைனி அனுமதி அளித்தார்.
இதையடுத்து சென்னையில் இருந்து, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் 2 பேர் இன்று டெல்லியில் திகார் சிறையில் வைத்து ராசா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
பிற்பகலில் இந்த விசாரணை நடக்கவுள்ளது.
ராசாவின் வீடு, உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட நிதி ஆதாரங்கள் தொடர்பான ஆவணங்கள் குறித்து அவர்கள் விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து ராசா உள்ளிட்ட அனைவரிடமும் மும்பை வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளனர். எடிசலாட் டி.பி. நிறுவனத்துக்கு ராசா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது குறித்து விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. இந்த விசாரணை எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications