விநியோகஸ்தர்கள் தட்டுப்பாடு-தானியங்கி பால் பூத்களை மூடுகிறது ஆவின்

ஆவின் நிறுவனம் தமிழகத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த ஆவின் நிறுவனத்திற்கு, சமீப காலமாக பெயர் கெட்டு புகழ் மங்கி வருகிறது. இதற்கு போதுமான அளவு விநியோகம் இல்லாததே காரணம் என்றக் குற்றசாட்டு பரவலாக இருக்கும் நிலையில், தேவையை பூர்த்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.
இதனால், ஆவின் பால் விற்பனை குறைய ஆரம்பித்துள்ளது. 216 தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை நடந்த வந்த சென்னையில், தற்போது 165 பால் விற்பனை மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இவற்றின் மூலம், தினமும் 26 ஆயிரத்து 381 லிட்டர் பால் விற்பனை நடக்கிறது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், தானியங்கி பால் இயந்திரங்களை பராமரிப்பது சிரமம். பாலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும், குளிர்சாதன பெட்டிகள் அடிக்கடி பழுதாகிவிடுகிறது. இதனால், 100 லிட்டருக்கும் குறைவான விற்பனை நடைபெறும் இடங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.
இதனால் தானியங்கி பால் இயந்திரம் மூலமான பால் விற்பனையை கமிஷன் அடிப்படையில் நடத்த கூட யாரும் முன்வருவதில்லை. குறைந்தது 400 லிட்டர் வரை விற்பனை நடக்கும் இடங்களில் மட்டுமே, தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை நடக்கிறது.
ஆவின் பால் பாக்கெட் விற்பனையில் எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது சென்னை மற்றும் புறநகரில் 165 தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை மையத்தில், 58 இடங்களில் ஆவினின் மற்ற பொருட்கள் விற்பனை நடக்கிறது, என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications