புகார் வாபஸ்..ஆனாலும் கலாநிதி மாறனுக்கு போலீஸ் மீண்டும் சம்மன்!

சேலத்தைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர்கள் செல்வராஜ் மற்றும் சண்முகவேலு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை தாக்கல் செய்த மனுவில் சன் பிக்சர்ஸ் தலைவர் சக்சேனா மீது தாங்கள் கொடுத்த புகார்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார்களை வைத்தே கலாநிதி மாறனை போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
ஜூலை 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கலாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை 26ம் தேதி வரை தனக்கு அவகாசம் வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். ஆனால் ஜூலை 26ம் தேதியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந் நிலையில், புகார் கொடுத்தவர்களே அதை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து கலாநிதி மாறனை எப்படியாவது இதில் சிக்க வைக்க வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ள காவல்துறை, மேலும் ஏதாவது ஆதாரங்கள் கிடைக்காதா என்று தேட ஆரம்பித்துள்ளதோடு, இது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடமும் ஆலோசனை கேட்டுள்ளனர்.
புகார் வாபஸ் பெறப்பட்டுவிட்டாலும், கலாநிதி மாறனுக்கு நேற்று போலீசார் மீண்டும் புதிதாக ஒரு சம்மன் அனுப்பியுள்ளனர். இத் தகவலை சென்னை அசோக்நகர் உதவி கமிஷனர் குருசாமி உறுதி செய்தார். மாறனின் வீட்டில் அந்த சம்மன் தரப்பட்டது என்றார்.
செல்வராஜ் மற்றும் சண்முகவேலு ஆகியோர் கொடுத்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்பதால் கலாநிதி மாறன் ஜூலை 28ம் தேதி காலை 11 மணிக்கு கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications