ஸ்லோவேகியா அனுப்பப்பட்ட கூரியர் பார்சலுக்குள் உயிருடன் பாம்பு- சென்னையில் மீட்பு
சென்னை: திருச்சியிலிருந்து ஸ்லோவேகியா நாட்டுக்கு அனுப்பப்பட்ட பார்சலை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் திறந்து பார்த்தபோது அதில் அரிய வகை பாம்பு உயிருடன் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சியிலிருந்து ஸ்லோவேகியா நாட்டு முகவரிக்கு ஒரு கூரியர் பார்சல் அனுப்பப்பட்டது. இந்த பார்சல் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்குள்ள சரக்குப் பெட்டகப் பகுதியில் பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்த பார்சல் குறித்து அவர்களுக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து அந்தப் பார்சலைத் திறந்து பார்த்தனர். அப்போது பார்சலுக்குள் ஒரு பாம்பு உயிருடன் வளைந்து நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அது அரிய வகை பாம்பாகும்.
பார்சலுக்குள் பாம்பு இருப்பதைப் பார்த்து குழம்பிப் போன அதிகாரிகள், அந்தப் பார்சலில் இடம் பெற்றிருந்த முகவரி குறித்து விசாரித்தபோது அப்படி ஒரு முகவரியே இல்லை என்பது தெரிய வந்தது. எனவே அது போலி முகவரி என்பது உறுதியானது.
இதையடுத்து முதலில் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்த அதிகாரிகள் இதுகுறித்து விமான நிலைய போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications