எதியூரப்பாவும், குடும்பத்தினரும் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்- ஹெக்டே

இன்று கர்நாடக அரசிடம் லோக் ஆயுக்தாவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. இதைத் தடுக்க, ஒடுக்க பாஜக அரசு முற்றிலும் தவறி விட்டது.
முதல்வர் எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரும் நேரடியாகவே சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத சுரங்கத் தொழில் காரணமாக அரசுக்கு ரூ. 16,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் குடும்பத்தினருக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பெருமளவில் நன்கொடைகளை அளித்து வருகின்றன. முதல்வர் குடும்பத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை ரூ. 10 கோடி வரை பெற்றுள்ளது. இவற்றை காசோலைகளைக் கொண்டு நாங்கள் கண்டுபிடித்தோம்.
லோக் ஆயுக்தா அறிக்கையின் நகல் ஆளுநர் பரத்வாஜுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் ஹெக்டே.
லோக் ஆயுக்தா தாக்கல் செய்துள்ள அறிக்கை மொத்தம் 25,220 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக 4 லட்சம் கோப்புகளை அதிகாரிகள் படித்துப் பார்த்ததாக சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
ஏராளமான அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் செயல்கள் குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஹெக்டே தெரிவித்தார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications