கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் ஊற்றியவருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு திருச்சி நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதி்த்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (20). அவர் பிளஸ் டூ படிக்கையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ராமஜெயம்(26) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இது பற்றி அறிந்த சரண்யாவின் பெற்றோர் அவர் பிளஸ் டூ முடித்த கையோடு அவரை திருச்சி கல்லுக்குழி கள்ளர் தெருவில் உள்ள தாத்தா பிச்சை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். சரண்யா தாத்தா வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சரண்யாவைப் பின்தொடர்ந்து ராமஜெயமும் திருச்சிக்கு சென்றார். ஆனால் ராமஜெயம் தனக்கு தொல்லை கொடுப்பதை விரும்பாத சரண்யா இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
சரண்யாவின் பெற்றோர் ராமஜெயத்தை சென்னைக்கு வரவழைத்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் திருச்சிக்கு வந்து கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி சரண்யாவுக்கு போன் செய்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு வந்தால் இதுவரை எழுதிய காதல் கடிதங்களை ஒப்படைப்பதாகவும், காதல் உறவை முறித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பி சரண்யா தனது சித்தியுடன் ராமஜெயத்தைப் பார்க்கச் சென்றுள்ளார். கடிதங்களை பையில் இருந்து எடுப்பது போன்று நடித்து தான் வைத்திருந்த ஆசிடை எடுத்து சரண்யா முகத்தில் ஊற்றினார் ராமஜெயம். இதில் சரண்யாவின் முகத்தின் ஒரு பகுதி, தலை, காது, கழுத்து, முதுகு வெந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் ராமஜெயத்தை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். மாயாண்டி முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த அவர் கொலை முயற்சி சட்டப்பிரிவின் கீழ் ராமஜெயத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications