அன்னா ஹஸாரேவின் ஆக. 16 உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீஸ் தடை
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே அறிவித்துள்ள ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு டெல்லி போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்பால் வரைவு மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் அதில் ஹஸாரே குழுவினர் கொடுத்திருந்த பரிந்துரைகள் எதுவுமே இடம் பெறவில்லை. இதையடுத்து மத்திய அரசின் வரைவு மசோதாவை கடுமையாக கண்டித்துள்ள ஹஸாரே குழுவினர், இது ஊழலை ஒழிக்க உதவாது என்று விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில்மத்திய அரசின் முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஹஸாரே, ஆகஸ்ட் 16ம் தேதி திட்டமிட்டபடி டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக நேற்று அறிவித்தார்.
இந்தப் பின்னணியில் ஹஸாரேவின் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications