வீரபாண்டி ஆறுமுகம் திடீரென மீண்டும் கைது-கோவை சிறையில் அடைப்பு, திமுகவினர் வன்முறை

கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கம்மாள் காலனி, பிரீமியர் மில் நில மோசடி வழக்குகளில் 3 நாள் அவரை காவல் நிலையத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், பின்னர் அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் செல்ல அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜரானார். அவர் 3 நாட்கள் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த ஜாமீன் நிபந்தனைப்படி சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தினமும் காலையில் கையெழுத்திட்டு வருகிறார்.
இன்று 3வது நாளாக கையெழுத்து போட வந்த வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் திடீரென கைது செய்தனர். கோவையில் ஒரு நில மோசடி தொடர்பாக அவரைக் கைது செய்தனர்.
நீதிமன்றங்கள் இன்று விடுமுறை என்பதால் அவரை கோவை நீதிபதி முன் ஆஜர்படுத்திவிட்டு கோவை சிறையில் அடைத்தனர்.
பேருந்துகள் உடைப்பு:
வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தை அழைத்துச் சென்ற போலீஸாருடன் மோதலிலும் ஈடுபட்டனர்.
அவரது கைதுக்கு எதிராக சேலம் நகரில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்து வருகின்றன. சேலம் பொதுமருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் எதிரில் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சேலம் நகரில் காலை முதல் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனையடுத்து நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications