ஒத்திகை நிகழ்ச்சியில் விபரீதம்- கண்ணீர் புகையில் சிக்கி தவித்த புதுவை முதல்வர்!
புதுச்சேரி: அதிவிரைவு அதிரடி படையினர் நடத்திய ஒத்திகையின் போது, புதுச்சேரி முதல்வர் புகையில் சிக்கி தவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில், பதட்டம் நிறைந்த பகுதிகளை கண்டறிந்து கலவரத்தை அடக்குவது குறித்த ஒத்திகையை, அதிவிரைவு அதிரடிப் படையினர் செய்து காட்டினர்.
அப்போது சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு, காவரி வெள்ளப் பெருக்கை தடுக்க கோரும் கும்பல் ஒன்று போராட்டம் நடத்துவது போலவும், அதை அடக்க அதிரடி படையினர் கையாளும் 6 வகையான வியூகங்கள் குறித்தும் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நிகழ்ச்சியை மேடையில் இருந்தவாறு பார்வையிட்டார்.
மைதானத்தில் கூடியிருந்த கூட்டத்தை கலைக்க, போராட்டக்காரர்கள் மீது அதிரடிப் படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அதிலும் கலையாத போராட்டக்காரர்கள், அதிரடி படையினர் மீது கற்களை வீசினர். அவர்களை கலைக்க, அதிரடி படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அப்போது குண்டுகளின் புகை காற்றில் திசை மாறி ரங்கசாமி பக்கம் வீசியதால், மேடையில் அமர்ந்திருந்து பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி, டி.ஜி.பி.சுக்லா, எஸ்.பி., சந்திரன் உள்ளிட்டோர் கண்ணீர் புகையில் சிக்கினர். அனைவரும் கண் எரிச்சல் ஏற்பட்டு, கண் கலங்கினர். இதனால் அங்கு பரபரப்பாகி விட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், முதல்வர் மற்றும் உயரதிகாரிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். கண் எரிச்சலை போக்க தண்ணீர் கொண்டு முகத்தை கழுவியும் எரிச்சல் குறையததால், முதல்வர் ரங்கசாமி உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஒத்திகையைப் பார்க்க வந்த முதல்வர் கண் கலங்கிச் சென்றது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications