லோக்பால் மசோதா- கபில் சிபல் தொகுதியில் ஹஸாரே கோரிக்கைக்கு அமோக ஆதரவு
டெல்லி: லோக்பால் மசோதா தொடர்பான அன்னா ஹஸாரேவின் கோரிக்கைகளுக்கு மத்திய அமைச்சர் கபில் சிபலின் தொகுதியில் பெரும் ஆதரவு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஹஸாரே குழுவினர் கபில் சிபல் எம்.பியாக உள்ள டெல்லி சாந்தினி செளக் தொகுதியில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அதில் லோக்பால் மசோதா தொடர்பாக அன்னா ஹஸாரே கொடுத்த பரிந்துரைகள் குறித்து மக்களின் கருத்தைக் கேட்டுள்ளனர்.
அதில் அன்னாவின் கோரிக்கைகளை ஆதரிப்பதாக 85 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்று ஹஸாரே குழுவினர் கூறியுள்ளனர்.
மொத்தம் 86,000 பேரிடம் கருத்து கேட்கப்படட்தாகவும், அதில் 72,000 பேர் அன்னாவின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கபில் சிபல் தொகுதியில் அன்னா குழு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்டிருப்பதால் கபில் சிபல் பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications