காங்கிரசால் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியாது - தமிழிசை சவுந்திரராஜன் கடும் தாக்கு

மேட்டுப்பாளையம் தொகுதி பாரதீய ஜனதா சார்பில் காரமடையில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது
இந்தியாவில் குண்டு வெடிப்பு கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் பலியானார்கள். இதை மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. இந்திய அரசால் மக்களை பாதுகாக்க முடியவில்லை.
மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சியால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜரின் முகத்தை வாஜ்பாய் முகத்தில் பார்த்தேன். அதனால் தான் பா.ஜ.க -வில் இணைந்தேன்.
வாஜ்பாய் இன்னும் ஒரு வருடம் பிரதமராக இருந்திருந்தால் இந்திய நதிகளை இணைத்திருப்பார். வாஜ்பாய் இந்த நாட்டின் பெருமையை உயர்த்தியவர்.
காங்கிரஸ் கட்சியால் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியாது. எனவே, நீங்கள் ராஜினாமா செய்து விட்டுப் போங்கள்.
இந்தியாவும், மக்களும் காப்பாற்றப்பட வேண்டும். இந்திய நாட்டை காப்பாற்ற பாரதீய ஜனதா கட்சியால் தான் முடியும். பாரதீய ஜனதாவை விட்டால் இந்த நாட்டில் வேறுவழியில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications