மாஜி திமுக அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் உதவியாளர் மகன் கைது
திண்டுக்கல்: முன்னாள் தி.மு.க., அமைச்சர் ஐ.பெரியசாமியின் உதவியாளர் தங்கவேல் மகன் அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சிவாஜி, காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், திண்டுக்கல், வத்தலக்குண்டு காந்தி நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் அசோக்குமார் என்பவர் விராலிப்பட்டியில் ஐந்து ஏக்கர் நிலத்தில் கல் குவாரி வைக்க கலெக்டரிடம் அனுமதி கேட்டார்.
அதன்பேரில் 2007, டிசம்பர் 7 முதல் 2017 வரை அனுமதி வழங்கப்பட்டது. கல்குவாரிக்கு அருகே உள்ள புறம்போக்கு நிலம், 4.98 ஏக்கரை ஆக்கிரமித்து கல் எடுத்து வருகிறார். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, சட்டத்தை மீறி செயல்படும் அசோக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியருந்தார்.
எஸ்.பி.,யின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் மேற்கண்ட விசாரித்தார். இதில், புகார் உண்மை எனத் தெரிந்தது. இதையடுத்து, அத்துமீறி அரசு நிலத்தில் நுழைந்தல், கல் திருடுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் அசோக்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட அசோக்குமார், முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் உதவியாளர் தங்கவேல் என்பவர் மகன் என்பது குறிப்பிடதக்கது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications