தீபாவளி: சிவகாசியில் பட்டாசு விற்பனை ஜோர்

Subscribe to Oneindia Tamil

Cracker
சிவகாசி: சிவகாசியில் தீபாவளி சீசனுக்கான பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை துவங்கி அமோகமாக நடந்து வருகிறது.

பட்டாசு தொழிற்சாலைகளில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிக்கும் பணி விருவிருப்பாக நடந்து வருகிறது. பட்டாசு விற்பனைக்காக சிவகாசி பகுதியில் 150 கடைகள் முறையான உரிமம் பெற்று ஆடி 18-ம் பெருக்கு மற்றும் புதன் கிழமையான நேற்று பூஜைகள் செய்து விற்பனையைத் துவங்கியுள்ளன.

சிவகாசி நகர் பகுதிகளில் தினசரி இயங்கும் பட்டாசு விற்பனை கடைகள் கடந்த மாதம் முதலே வெளியூர்களுக்கு பட்டாசு அனுப்பி வருகின்றன. தீபாவளி கிப்ட் பாக்ஸ் ஆர்டர்களை வெளியூர்களுக்கு அனுப்பும் பணி நேற்று துவங்கியது.

இந்த ஆண்டும் சரவெடி, லட்சுமி வெடி, குருவி வெடி போன்ற வெடி வகைகள் தயாரிப்பு பணிகள் மந்தமாக உள்ளது. இதனால் இந்த வகை வெடிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் உள்ளது.

இது தவிர இந்த ஆண்டு மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததாலும் பட்டாசுகளின் விலை உயரும் என்று கூறப்படுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+