ரூ. 25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட தலைமைச் செயலக செய்தியாளர்கள் அறை-ஜெயலலிதா திறந்து வைத்தார்

தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்க வரும் நிருபர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்டோரின் வசதிக்காக அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது தனி அறை ஒதுக்கி வசதி செய்து தரப்பட்டது.
இந்த அறை தற்போதைய சூழ்நிலையில் பெருகி வரும் செய்தியாளர்கள் எண்ணிக்கை காரணமாக இட நெருக்கடிக்குள்ளாகியது. மேலும் பல்வேறு வசதிக் குறைபாடுகளும் இருந்து வந்தன. இதையடுத்து அந்த அறை கீழ்த் தளத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு போன பின்னர் அது புனரமைக்கப்படாத நிலையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் முதல்வர் பொறுப்பில் மூன்றாவது முறையாக அமர்ந்த முதல்வர் ஜெயலலிதா ரூ. 25 லட்சம் நிதியை ஒதுக்கி செய்தியாளர்கள் அறையை புதுப்பிக்க உத்தரவிட்டார்.
அதன்படி புதிய செராமிக் டைல்ஸ் பதித்து அறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுவர்கள் அலங்கரிக்கப்பட்டு, புதிய மேசை, நாற்காலிகள் போடப்பட்டு, ஏசி வசதி செய்யப்பட்டு, டிவி வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடியதாக படு ஜோராக மாற்றப்பட்டுள்ளது செய்தியாளர் அறை.
இங்கிருந்தபடியே சட்டசபையில் நடைபெறும் நிகழ்வுகளைக் கேட்க ஸ்பீக்கர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிக்கப்பட்ட அறையை நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications