பட்ஜெட்- சட்டசபை உறுப்பினர் தொகுதி நிதி ரூ. 2 கோடியாக உயர்வு
சென்னை: சட்டசபைத் தொகுதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி நிதி ரூ. 2 கோடியாக உயர்த்தப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில், சட்டசபை உறுப்பினர்களுக்கு ஒரு நற்செய்தி.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி உதவி நிதி ஆணடுக்கு ரூ. 2 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்..
- இரண்டாம் நிலை நகரங்களில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்புகளை முழு அளவில் பயன்படுத்தும் பொருட்டு காலியாக உள்ள இடங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கணினி வன்பொருள் துறையில் முதலீட்டினை ஈர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்த அரசானது புதிய தகவல் பரிமாற்ற தொழில் நுட்பக் கொள்கை 2011-ஐ உருவாக்கும். இக்கொள்கையானது மென் பொருள், வன் பொருள் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் அமையும்.
- 113 கி.மீ. உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 2,500 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளை 5,000 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணியை இந்த அரசு மேற்கொள்ளும்.
2011-2012-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 257 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மீதமுள்ள 113 கி.மீ. நீள சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.
சென்னையில் 2ம் வெளிவட்டச் சாலை:
- தெற்காசியாவின் பெரிய தொழில் மையமாக சென்னை திகழ்கிறது. வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகை, வாகன நெரிசல் ஆகியவற்றை சமாளிக்க முதற்கட்ட வெளிவட்டச் சாலைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெமிலிச்சேரியையும் மீஞ்சூரையும் இணைக்கும் இரண்டாம் கட்ட வெளி வட்டச்சாலை அமைக்கும் பணி ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் 1,075 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
- சிறுசேரியிலிருந்து மாமல்லபுரத்தை இணைக்கும் 25 கி.மீ. நீளமுள்ள ராஜீவ்காந்தி சாலையில் இரண்டாம் கட்டப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவுற்றவுடன் 550 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சாலையின் தரத்தைச் சீராகப் பராமரிப்பதற்கு தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இந்த ஆண்டில் கணினிவழி சாலை பராமரிப்பு முறை, சாலையின் தரம், புவியியல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய தகவல் தொகுப்பு ஆகியவற்றை உபயோகித்து சாலை மேலாண்மையும், திட்டமிடும் பணிகளும் மேற் கொள்ளப்படும்.
- மாநில நெடுஞ்சாலைகளையும், மாவட்டப் பெருஞ்சாலைகளையும் செயல்பாட்டின் அடிப்படையில் சாலைப் பராமரிப்பு ஒப்பந்த முறை மூலம் மேம்படுத்தி பராமரிக்கும் பணிகளை அரசு - தனியார் கூட்டு முயற்சியில் இந்த அரசு செயல்படுத்தும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications