தயாரிப்பாளர் சங்கத்துக்கு உடனே தேர்தல் நடத்தாவிட்டால் உண்ணாவிரதம்! - கே ராஜன்
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு உடனடியாக தேர்தல் நடத்தாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக எச்சரித்துள்ளார் தயாரிப்பாளரும் தடாலடி அறிக்கைகளுக்கு சொந்தக்காரருமான கே ராஜன்.
தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பை நடத்தி வரும் கே.ராஜன் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை:
"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர் தாக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த நிர்வாகத்தில், கேள்வி கேட்கக்கூட பயந்து கொண்டிருந்த உறுப்பினர்களில் சிலர், இன்று தைரியத்துடன் கேள்வி கேட்கிறார்கள் என்றால், சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் பேச்சுரிமையும், சுதந்திரமும் சங்க உறுப்பினர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
இந்த சுதந்திரம் செயற்குழுவில் புகுந்து உறுப்பினரை அடிக்கின்ற அளவுக்கு மாறக்கூடாது. இப்போது பொதுக்குழுவை கூட்டினால் மறுபடியும் அடிதடி கலாட்டா நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே உடனடியாக செயற்குழுவை கூட்டி, தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் வருகிற 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் இருப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.''
இவ்வாறு கே.ராஜன் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications