மதுரையில் பிரபல ரவுடி ஆட்டோவில் கடத்தி கொலை
மதுரை: மதுரை அருகே பிரபல ரவுடியை ஆட்டோவில் கடத்தி சென்ற மர்மக்கும்பல் ஒன்று, கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.
மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (26). பிரபல ரவுடி. இவன் மீது ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வெற்றிவேலை, 8 பேர் கொண்ட மர்மக்கும்பல் ஒன்று ஆட்டோவில் கடத்தி சென்றது. கரடிக்கல் செல்லும் சாலைக்கு சென்ற போது, வெற்றிவேலின் கழுத்தை அறுத்தும், உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். பின்பு அவனது உடலை அருகில் உள்ள பள்ளத்தில் போட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, ஆட்டோ டிரைவர் ஆனந்தன் என்பவர் போலீசாரைக் கண்டதும், ஆட்டோவுடன் அந்த இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றார்.
ஆனால், சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் அவரால் வேகமாக செல்ல முடியாமல் போலீசாரிடம் சிக்கி கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்த மதுரை எஸ்.பி ஆஸ்ராகர்க் மற்றும் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மதுரையில் பிரபல ரவுடியாக உலா வந்த வெற்றிவேல், ஆட்டோவில் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications