அமெரிக்க நெருக்கடியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்! - ரிசர்வ் வங்கி
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் கடன் தரவரிசை குறைந்ததால் உலகப் பொருளாதாரமே ஆடிப் போயுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகள் திண்டாடிப் போயுள்ளன. இந்தியாவிலும் பங்குச் சந்தை சரிந்து தள்ளாடிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
எப்படிப்பட்ட மோசமான விளைவுகளுக்கும் ஈடுகொடுக்கும் விதத்தில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் இன்றைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடன் தரவரிசை இறங்கியுள்ளதால் இந்திய பங்குச் சந்தைகள் சரிந்துள்ளன. இது தற்காலிகமானது. விரைவில் இயல்பு நிலை திரும்பும். இதுபோன்ற தருணங்களை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications